Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜீத். அவர் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘டார்ச் லைட்’. 90களில் நடக்கும் கதையான இது, நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்" அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில், பிரதான வேடத்தில் சதா நடித்துள்ளார்.
“வறுமையைப் பயன்படுத்திப் பெண்களை இந்தச் சமூகம் எப்படிப்பட்டப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதை சார்ந்து பலர் உண்மை சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்டப் பலரையும் சந்தித்துப் பேசி, காணொளியில் பதிவுசெய்து படமாக்கினேன். கதைக்கு என்ன தேவையோ, அதை மட்டும் படமாக்கியுள்ளேன்.
இந்தப் படத்துக்கு சென்னையில் உள்ள தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர். எனவே, மும்பைக்குச் சென்று போராடி, ‘ஏ’ சான்றிதழ் வாங்கியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்” என்கிறார் மஜீத்.
ரித்விகா, உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்கள் எழுத, ஜேவி இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025