Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 26 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பில், பல்சர் சுனில், பாவனாவின் டிரைவர் மார்ட்டின் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், பாவனா கடத்தலுக்கும் நடிகர் திலீபுக்கும் தொடர்பு இருப்பதாக, பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில், சிறையில் இருந்தபடியே நடிகர் திலீபுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதமொன்று வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது:
“திலீப் அண்ணா... நான் சிறையில் இருந்து கஷ்டப்பட்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன். இந்தக் கடிதம் கொண்டு வருபவருக்கு, இந்த வழக்கு பற்றி எதுவும் தெரியாது. நான் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு, தங்களை சந்திக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை.
என் வாழ்க்கை என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால், என்னை நம்பி இந்த வழக்கில் சிக்கிய 5 நண்பர்களையும் நான் காப்பாற்ற வேண்டும். அதனால், எனக்குத் தருவதாகக் கூறிய பணத்தை உடனடியாகத் தர வேண்டும். மொத்தமாகத் தர முடியாவிட்டாலும், 5 தவணைகளாகக் கொடுங்கள். இனியும் என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உங்களை இதுவரை நான் கைவிடவில்லை. இப்போது எனக்கு பணம் தேவைப்படுகிறது” என, அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாவனா கடத்தலுக்கு தூண்டுகோலாக இருந்தவர் திலீப் என்பது நிரூபணமாகும். இந்நிலையில், நடிகர் திலீப், பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் கொடுக்காவிட்டால் பாவனா வழக்கில் சிக்கவைத்து விடுவதாக அச்சுறுத்துவதாகவும், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
6 hours ago
6 hours ago