Freelancer / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி. இலங்கையை சேர்ந்த இவர் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். இதையடுத்து, பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
தற்போது, ஜனனி நிழல் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த ஜனனிக்கு ஜாக்பாட் அடித்தது போல, விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே விஜய், த்ரிஷா என டாப் நடிகர்களின் படத்தில் நடித்தார்.
லியோவில் அவருக்கு கிடைத்த கதாப்பாத்திரம் சிறியதாக இருந்தாலும், அதில் கன கச்சிதமாக பொருந்தி நடித்திருந்தார் ஜனனி. விஜய்யுடன் இணைந்து நடித்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்றார்.
லியோ படத்திற்கு பிறகு நல்ல ரோலுக்காக காத்திருந்த ஜனனி, உசுரே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் ஜூன் மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து ஏ.கே. குமார் இயக்கத்தில் பிக் பாஸ் ஜனனி, நிழல் திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
அதில், பச்சை நிற உடையில், கழுத்தில், ஸ்டெதஸ்கோப்புடன் ஜனனி இருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் ஜனனிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த படத்தில் விசான், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், படத்தை வெளியிடுவதற்கான அடுத்த கட்ட வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. R
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago