Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் 100 நாட்கள் நடைபெற்ற பிக் பொஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாவது இடம் கவிஞர் சினேகனுக்குக் கிடைத்துள்ளது.
பிரபலங்களை, வெளியுலகத் தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமல்ஹாசன் நடத்தினார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பப் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி ஆகியோர் இடைப்போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி நேற்று (30) முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாம் இடத்தை கவிஞர் சினேகனும், மூன்றாம் இடத்தை நடிகர் ஹரிஷ் கல்யாணும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு வெற்றிக் கேடயமும், 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 76,76,53,065 பேர் வாக்களித்துள்ளனர் என நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். வெற்றிக்கு பின்னர் கருத்துத் தெரிவித்த ஆரவ் இந்த பட்டத்தை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தனது ஆசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago