2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளர் VJஅர்ச்சனா

Mayu   / 2024 ஜனவரி 15 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் சீசன் 7 வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த VJ அர்ச்சனா நேற்றைய தினம் நடைப்பெற்ற இறுதி போட்டியில் வெற்றியாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த  வருடம் ஒக்டோபர் 01ஆம் திகதி ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா, விஷ்ணு, மணி, விசித்ரா, வினுஷா, நிக்சன், கூல் சுரேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். அதன் பின்னர் 30 நாட்கள் கழித்து தினேஷ், அர்ச்சனா, ப்ராவோ உள்ளிட்ட சில போட்டியாளர்கள் நுழைந்தனர்.

நூறு நாட்களுக்கு மேல் நடந்த இந்த போட்டியில் வாரம் ஒருவர் அல்லது இருவர் வீதம் பார்வையாளர்களின் வாக்குகளுக்கு ஏற்ப வெளியேற்றப்பட்டு வந்தனர். அண்மையில் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியில் இருந்த ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறினார்.

இந்த நிலையில், இறுதியாக விஷ்ணு, மாயா, அர்ச்சனா, தினேஷ், மணி ஆகிய மூவரும் இறுதி போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தனர். கடைசி நாளில் முதலில் விஷ்ணு, அவரைத் தொடர்ந்து தினேஷ் இருவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், மாயா இரண்டாவது வெற்றியாளராக வெளியேறினார். அதன் பிறகு அர்ச்சனா, மணி இருவரில் அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X