Editorial / 2020 மே 26 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘சகுனி, மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படங்களில் நடித்த நடிகை பிரணிதா, ஊரடங்கில் ஏழை, எளியவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்தார்.
இந்த நிலையில் நடிகை பிரணிதா சமூக ஊடங்களில் ரசிகர்களுடன் கருத்து பகிர்ந்து வந்தார். அப்போது, அவர் தெரிவிக்கையில் ''அப்பா - அம்மா டாக்டர் என்பதால் என்னையும் டாக்டராக்க நினைத்தனர்.
எனக்கு சினிமாவில் ஆர்வம். ஆரம்பத்தில் எதிர்த்தனர். பின் பட வாய்ப்பு வரவும், என் இஷ்டத்துக்கு விட்டுவிட்டனர்.
பல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு சினிமாவில் கிடைக்கும், அதனால் நடிகையானது பெருமையே. எனக்கு சரித்திரகாலத்து கதையில் அதற்கு ஏற்ற உடை, ஆபரணங்கள் அணிந்து நடிக்க ஆசை” என்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .