2025 மே 05, திங்கட்கிழமை

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்

J.A. George   / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல மலையாள இசையமைப்பாளர் கைதபிரம் விஸ்வநாதன் நம்பூதிரி காலமானார். அவருக்கு வயது 58.

மலையாள சினிமாவில் 1996ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான கைதபிரம் விஸ்வநாதன் 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் எழுத்தாளரும் இசையமைப்பாளருமான கைதபிரம் தாமோதரன் நம்பூதிரியின் சகோதரர் ஆவார். இவஙர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் இசைக் கற்றார்.

இயக்குனர் ஜெயராஜ் இயக்கிய ‘கண்ணகி’ மற்றும் திலீப் நடித்த ‘திலக்கம்’ ஆகிய படங்கள் அவரது இசையில் வெளியான முக்கியமான படங்கள் ஆகும்.
 
கைதப்பிரம் விஸ்வநாதன் நம்பூதிரியின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ‘ஏகாந்தம்’ படத்தில் ‘கையேதும் தூரே ஒரு குட்டிகாலம்’, ‘நீயொரு புழையாய்’, ‘திலக்கம்’ படத்தில் வரும் ‘எனிக்கொரு பெண்’ ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி பெற்றவை.

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த கைதப்பிரம் விஸ்வநாதன் நம்பூதிரி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X