2025 நவம்பர் 05, புதன்கிழமை

பிரபல இயக்குனருடன் இணைகிறார் சூர்யா!

Freelancer   / 2022 மே 25 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பாகுபலி',  'கேஜிஎப்' போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்குவதற்காக பிரபல இயக்குனருடன் நடிகர் சூர்யா இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. இதனையடுத்து, அவர் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக செய்திகள் வெளியானது.

அந்தவகையில்,  'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,  தற்போது வந்துள்ள தகவலின்படி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும்,  இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இது ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படம் என்றும் 'பாகுபலி',  'கே.ஜி.எப்' போன்று பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதுமட்டுமின்றி 'பாகுபலி',  'கே.ஜி.எப்' போன்று இந்த படமும் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X