Editorial / 2020 ஜூலை 13 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல ஹிந்தி சீரியல் நடிகை திவ்யா சாக்ஷி. இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சீரியல்களில் நடித்துள்ளார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். திவ்யா உயிரிழந்ததை அவரது உறவினர் சவும்யா அமிஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
திவ்யா சாக்ஷி லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். சில படங்களில் நடித்திருக்கிறார். பாடகியாகவும் வலம் வந்துள்ளார்.
இவரது இழப்பு ஹிந்தி சினிமாவிலும், சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திவ்யா உடன் நடித்தவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .