2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா!

Freelancer   / 2022 மே 24 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷா,  ரஜினி, அஜித், விஜய்,  சூர்யா, விக்ரம்,  தனுஷ்,  சிம்பு உள்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நிலையில் தற்போது முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

'த்ரிஷ்யம்' என்ற படத்தை எடுத்து உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
 
'ராம்' என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் அதன் பின் மோகன்லால் வேறு சில படங்களில் பிஸியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'ராம்' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.

இதனை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X