Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர், இன்று மும்பை வைத்தியசாலையில் தனது 67ஆவது வயதில் காலமானார்.
கடந்த 2 ஆண்டுகளாக, ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, இந்தியாவுக்குத் திரும்பினார்.
பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973இல் வெளியான ´பாபி´ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
56 minute ago