2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பிறந்த நாளில் ப்ரியாவுக்கு அதிர்ஷ்டம்

J.A. George   / 2021 ஜனவரி 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், சிம்புவின் ’பத்துதல’ திரைப்படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது ராகவா லோரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர் தான் என அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நேற்று(31) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் முடிந்தவுடன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இயக்குநர் குறித்த தகவல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பு வெளிவரும் போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கும்’ருத்ரன்’திரைப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X