Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள “சக்க போடு போடு ராஜா” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் மராட்டிய நடிகை வைபவி சாண்டல்யா.
மராட்டியில், கடந்த இரண்டு வருடங்களாக நடித்து வரும் வைபவி, ஓர் அராபிக் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சந்தானம் ஜோடியாக, “சர்வர் சுந்தரம்” திரைப்படத்தில் நடிக்க அழைத்து வரப்பட்டார். அந்தத் திரைப்படம் தாமதமாகவே சந்தானம் தனது அடுத்த திரைப்படமான “சக்க போடு போடு ராஜா” திரைப்படத்திலும் வைபவியை ஹீரோயின் ஆக்கிவிட்டார்.
தற்போது “சக்க போடு போடு ராஜா” அடுத்து வெளிவரவுள்ளது. அதன் பிறகு, “சர்வர் சுந்தரம்” வெளிவரவுள்ளது. தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடிவு செய்துள்ள வைபவி, தீவிரமாக தமிழ் கற்று வருகிறார். இரண்டு திரைப்படத்திலுமே, வைபவிக்கு வலுவான கேரக்டர்கள் என்று கூறப்படுகிறது. அடிப்படையில், நடன கலைஞரான வைபவி, தான் நடித்த அராபிக் திரைப்படத்தில், டான்சராக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Nov 2025