Editorial / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் "பொன்ஜர் சினிமா" நிகழ்வு, இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம், ஆர்ட்ரா சஞ்சிகை ஆகியவற்றுடன் இணைந்து, எம்பையர் சினிபிளெக்ஸ், மஜெஸ்டிக் சிற்றி ஆகிய திரையரங்குகளிலும், அலியோன்ஸ் ஃபோசே டெ கோட்டேயிலும், திரைப்படங்கள் காட்சிப் படுத்தப்படவுள்ளன.
மாதந்தோறும், மாலை 7 மணிக்கு, திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். 3 திரைப்படங்கள், திரையரங்குகளிலும், 9 திரைப்படங்கள், அலியோன்ஸ் ஃபோசே டெ கோட்டேயிலும் திரையிடப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது திரைப்படம், டானியல் தொம்ப்சனால் இயக்கப்பட்ட "சிஸன்ஸ் இ மோ" ஆகும். இத்திரைப்படம், இம்மாதம் 21ஆம் திகதியும் 28ஆம் திகதியும், மாலை 7 மணிக்கு, எம்பையர் சினிபிளெக்ஸ் திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இத்திரையிடல்கள், இலவசமாகக் காண்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025