Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பான “பொன்னியன் செல்வன்” படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி என்கின்ற கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட "பொன்னியின் செல்வன்" என்ற பிரம்மாண்டமான நாவல் வெளிவந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்டது.
எத்தனை முறை படித்தாலும் சலிப்புத் தட்டாத இக்கதையை இயக்குவதற்கு 1960லிருந்து இன்று வரை பல இயக்குனர்கள் முயன்று வருகின்றனர்.
5 பாகங்களைக் கொண்ட இக்கதையை 3 மணி நேரத்திற்குள் முடிப்பது என்பது இயலாத காரியம். தற்பொழுது இக்கதையை மணிரத்னம் இயக்கவுள்ளார்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
தற்போது இந்த பட்டியலில் மேலும் 2 நாயகிகளை இணைத்துள்ளார் மணிரத்னம். ஒருவர் "ஆடை" அமலா பால் மற்றொருவர் ஐஸ்வர்யா லஷ்மி.
இவர்களைத் தொடர்ந்து அடுத்த ஆச்சர்யமாக நடிகர் பார்த்திபன் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை மணிரத்னம் உடன் எடுத்த புகைப்படத்தை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார் பார்த்திபன்.
படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,
— R.Parthiban (@rparthiepan) July 28, 2019
திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில்-பெருங்களிப்பில்
'பொன்னியின் செல்வன்'.
அப்படத்திற்காக Spelling மட்டுமே கற்றிருந்த நான் Swimming கற்கிறேன்! pic.twitter.com/Dnva7CzStg
இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago