J.A. George / 2022 ஜூன் 14 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’திரைப்படத்தில் ஏற்கெனவே இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஷாலினி அஜித் நடித்துள்ளதாகவும் அவரது கேரக்டர் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த அஜீத்தின் மேனேஜர், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஷாலினி அஜித் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் இது முற்றிலும் தவறான தகவல் என்றும் ’ பொன்னியின் செல்வன்’ உள்பட எந்தத் திரைப்படத்திலும் ஷாலினி அஜித் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஷாலினி அஜீத் நடித்துள்ளார் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தில் ஷாலினி அஜீத் நடித்து இருந்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago