Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீதா கோவிந்தம் தெலுங்கு படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா அந்த ஒரே படம் மூலம் இந்தியா முழுதும் புகழ் பெற்றார்.
அப்படத்தில் வந்த "இங்க்கம் இங்க்கம் இங்க்கம் காவாலே" என்ற பாடல் மொழி கடந்து அனைத்து மக்களிடமும் அவரைக் கொண்டு சேர்த்தது.
நடிகர் விஜய் தேவரைக்கொண்டவுடன் லிப்லாக் காட்சிகளில் நடித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியதுடன் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்த நிலையில், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் தமிழ் படத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ரஷ்மிகா.
அடுத்து மீண்டும் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அதற்கு அவருக்கு அதீத சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.
ரஷ்மிகா இதற்குமுன்பு 40 இலட்சம், 60 இலட்சம், 64 இலட்சம், 80 இலட்சம் வரை சம்பளம் வாங்கியதுடன்,தற்போது விஜய்யுடன் நடிக்கும் படத்திற்கு 1 கோடி ரூபாயாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
பல வருடங்கள் சினிமாவில் இருக்கும் ஹீரோயின்களுக்கே 1 கோடி ரூபாய் சம்பளம் கிடையாது என்பதால், பலரும் அவரை பொறாமையுடன் பார்த்து வருகிறார்கள்.
ராஷ்மிகா என்னதான் சம்பளத்தை உயர்த்தினாலும் தயாரிப்பாளர்கள் அவரை மொய்ப்பது குறையவில்லை. அவரும் வரிசைகட்டி முன்னனி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
நடிக்க வந்த கொஞ்ச காலத்திற்குள்ளாகவே அதிக சம்பளம், அதிக பட வாய்ப்பு என கலக்கும் ராஷ்மிகாவை பார்த்து மற்ற நடிகைகள் பொறாமையில் பொங்குகிறார்களாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .