2025 மே 21, புதன்கிழமை

மீண்டும் தள்ளிப்போன விஜய் சேதுபதி திரைப்படம்

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த திரைப்படம் மெல்லிசை. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கினார். பல ஆண்டுகளாக வெளிவர முடியாமல் இருந்த இந்த திரைப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேசன் சார்பில் சதீஷ்குமார் வாங்கினார்.

திரைப்படத்தின் பெயரை புரியாத புதிர் என்று மாற்றினார். டிசெம்பர் 23ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். இதன் தெலுங்கு உரிமம் கணிசமான தொகைக்கு விற்பனையானது. ஆனால், திரைப்படம் திட்டமிட்டபடி 23ஆம் திகதி வெளியாகவில்லை. பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இதுகுறித்து ஜே.எஸ்.கே சதீஷ்குமார் கூறுகையில், “விரைவில் பிறக்க இருக்கின்ற தைத்திருநாளை வரவேற்க ஒட்டுமொத்த தமிழகமும் உற்சாகத்துடன் தயாராகி கொண்டிருக்கும் இந்த தருவாயில், தரமான திரைப்படங்கள் மூலம் அவர்களின் மகழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, திரையுலகின் முக்கிய கடமை.

விஜய் சேதுபதிக்கும், தமிழக ரசிகர்களுக்கும் எப்போதுமே ஒரு இணை பிரியா உறவு இருக்கிறது. அதனை பொங்கலன்று வெளியாகும் எங்களின் “புரியாத புதிர்” திரைப்படம் உறுதிப்படுத்தும்.

2017 ஆம் ஆண்டிற்கான சிறந்ததொரு பொழுதுபோக்கு திரைப்படமாக “புரியாத புதிர்” இருக்கும்” என்கிறார் ஜே சதீஷ் குமார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X