2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மூன்று முகம்

George   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா நடித்துவரும் திரைப்படத்துக்கு ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மூன்றுமுகம் பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல், கோலிவூட்டில் வைரஸாக பரவி வருகிறது.

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள புலி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. புலி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதே, விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

திரைப்படத்தின் பூஜையின்போதே, பெயரையும் அறிவிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திரைப்படத்தின் தலைப்பு அப்போது அறிவிக்கப்படவில்லை.

படப்பிடிப்பு, தற்போது சில கட்டங்களையும் தாண்டியுள்ளது. இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இத்திரைப்படத்துக்கு, ரஜினி நடித்த 'மூன்று முகம்' தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜெக்ஷன நடிக்க உள்ளனர். மூத்த இயக்குநர் மகேந்திரன், முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

விஜய் 59 படத்துக்கு மூன்று முகம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வைரஸாக பரவிவரும் நிலையில், திரைப்படக்குழுவினர் மௌனம் காத்துவருகின்றனர். அவர்கள் வாய் திறந்தால் தான், வாய் தீயாய் பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .