J.A. George / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவான ’சர்க்காரு வாரி பாட்டா’ என்ற திரைப்படம் வரும் மே மாதம் 12ஆம் திகதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அண்மையில் பேட்டியளித்த மகேஷ்பாபு, ஒரு முறை தான் தனது குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இரண்டு பெண்கள் தன்னிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டதாகவும், தற்போது குடும்பத்துடன் தனிப்பட்ட நேரம் செலவளிக்க வந்துள்ளதால் ஆட்டோகிராப் போட மறுத்து விட்டதாகவும் கூறினார்.
அப்போது தன்னுடைய நண்பர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்ட இரண்டு பெண்கள் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள்கள் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதன் பிறகு ஷங்கரை நேரில் பார்த்து ஆட்டோகிராப் போட்ட மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஷங்கரின் மகள்கள் இருவரும் ஒரு பிரமாண்ட இயக்குநரின் மகள்கள் என்ற பந்தா இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருந்தார்கள் என்றும் அது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த பேட்டியில் மகேஷ் பாபு கூறியுள்ளார்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago