2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 10 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகத்தை நடிகா் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகா் கவனித்து வந்தார். அவா் அவ்வப்போது பல மாவட்டங்களுக்குச் சென்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.

இந்தச் சூழ்நிலையில் விஜயின் மக்கள் இயக்கம் தலைமை தோ்தல் ஆணையத்தில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியாக அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகா் பதிவு செய்துள்ளார்.

கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகா், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று விஜய் தெரிவித்திருந்தார். தற்போது ஷோபாவும் எஸ்.ஏ.சி. கட்சியிலிருந்தும், பொருளாளா் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை செய்து வருகிறார். விஜயின் தந்தை எஸ்.ஏ.சி. அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் விஜய்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X