Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மில்லியன்களில் ஹிட் அடித்த ஜாலியான வீடியோக்களில், சாமானியத் தமிழ்ப் பெண் கதாபாத்திரங்களில் நிரஞ்சனா நெய்தியாரைப் பார்க்கலாம். யூடியூபில் கிடைத்த புகழ் வெளிச்சத்தின் வழியாக ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர். தற்போது, ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ என்கிற சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று தரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். முதல் படமே வெற்றிமுகம் தந்திருப்பதால் உற்சாகத் துள்ளலில் இருக்கும் அவர், ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டில்,
படத்தில் இடம்பெற்ற தன்பாலின முத்தக்காட்சியில் நடித்தபோது சங்கடமாக உணர்ந்தீர்களா?
நிச்சயமாக இல்லை. நான் ஒரு ஏலியனுக்கு முத்தம் கொடுக்கவில்லை. அன்பாக வளர்க்கும் பெட் அனிமல்களுக்கே முத்தம் கொடுக்கிறோம். ரத்தமும் சதையுமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பதில் என்ன சங்கடம்? அதுவுமில்லாமல், இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை டெலிவர் செய்வதுதானே ஒரு நல்ல நடிகரின் கடமை. அதைத்தான் நான் செய்தேன். நல்ல கதாபாத்திரம் என்றால் அது எவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் என்னால் ஏற்று நடிக்க முடியும் என்று காட்டியிருக்கிறேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago