Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 27 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
37 வயது நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தபோது இணையத்தில் புயலைக் கிளப்பினார்.
அவர்களுக்கிடையேயான வயது வித்தியாசம் 2018ம் ஆண்டில் கலந்துரையாடலின் தலைப்பாக மாறியது, நெட்டிசன்கள் இந்த திருமணம் பற்றி விமர்சித்தனர்.
எனினும், இந்த ஜோடி எப்போதும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள். அண்மையில், ஒரு நிகழ்ச்சியின் போது, ப்ரியங்காவின் கணவர் நிக் ஜோனாஸ் கூட மனைவியின் வயது வித்தியாசத்தை 'கூல்' என்று கூறினார்.
அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் தற்போது ஒரு ரியாலிட்டி ஷோவின் - தி வாய்ஸ் சீசன் 18 இல் நீதிபதிகளில் ஒருவராக உள்ளார்.
நிகழ்ச்சியின் முதல் எபிசோடில், நிக் ஜோனாஸ் தனக்கும் அவரது மனைவி பிரியங்கா சோப்ராவுக்கும் இடையிலான வயது வித்தியாசத்தைப் பற்றி கேலி செய்த போது அதை அவர் கூல் என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியின் போது, நிக் மற்றும் இன்னொரு நீதிபதி கெல்லி கிளார்க்சன் வயது குறித்த விவாதத்தில் இறங்கினர். போட்டியாளரான டோட் தான் தேவாலயத்தில் பாடும் ஒரு போதகர் என்பதை வெளிப்படுத்தி, அவர் தனது பழைய பள்ளிப்பருவ பாடலொன்றை பாடினார்.
அந்த பாடலை பற்றி கூறிய கெல்லி, 'நிக் நான் 37 வயதாக இருக்கிறேன். நீங்கள் 27 இல்லையா?" என்றார்.
அதற்கு பதிலளித்த நிக், தனது மனைவியும் 37 வயதாக இருப்பதை சுட்டிக்காட்டி, “என் மனைவியின் வயதும் 37. இது அருமையாக இருக்கிறது நாங்கள் மனமொன்றி வாழ்கிறோம். கல்யாணத்துக்கு வயசு முக்கியமில்லை மனசுதான் முக்கியம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
49 minute ago