2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மனந்திறந்த திஷா பதானி

J.A. George   / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய திரை உலகில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் தற்பொழுது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்க இருக்கும் “சூர்யா 42” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

தற்பொழுது சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்க, ஆனந்த்ராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்து தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதை பற்றி முதல்முறையாக நடிகை திஷா பதானி மனந்திறந்துள்ளார். அதில் அவர், சூர்யா மற்றும் சிவாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இதில் என் கேரக்டர் தனித்துவமானது. இதுவரை நடித்திராத புதுமையான பாத்திரத்தை பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X