Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மயக்க மருந்து கொடுத்து, சில நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கிராமி விருது பெற்ற பிரபல பாடகி டஃபி சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகி டஃபி(35) கிராமி விருது பெற்றவர். சில காலமாக அவரை ஆளையே காணவில்லை என்று ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், “இதை எப்படி எழுதுவது என்று நான் பல முறை யோசித்துள்ளேன். தற்போது ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை.
எனக்கு என்ன ஆகிவிட்டது, நான் ஏன் திடீர் என்று காணாமல் போய்விட்டேன் என்று பலர் வியந்திருக்கலாம்.
ஒரு செய்தியாளர் என்னை தொடர்பு கொண்டார். அவர் எப்படியோ என்னை தொடர்பு கொள்ள, கடந்த கோடைக்கு பிறகு நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டேன்.
ஒரு வழியாக பேசியது நன்றாக இருந்தது. நான் தற்போது நன்றாக இருக்கிறேன். மயக்க மருந்து கொடுத்து, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சில நாட்கள் அடைத்து வைக்கப்பட்டேன்.
அதையும் தாண்டி வந்துவிட்டேன். அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர நேரம் எடுத்தது.
நான் ஏன் என் வலியை என் குரல் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை என்று நீங்கள் வியக்கலாம். என் கண்களில் இருந்த சோகத்தை யாருக்கும் காட்ட விரும்பவில்லை.
இதயம் நொறுங்கியபோது எப்படி பாட முடியும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். பின்பு மெதுவாக என் இதயம் சரியானது. விரைவில் நான் பேட்டி அளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
23 minute ago
28 minute ago