2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மயங்கி விழுந்த விஷால் கொடுத்த விளக்கம்

S.Renuka   / 2025 மே 15 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், தனது உடல்நிலை குறித்து விஷால் விளக்கமளித்துள்ளார்.

'மதகஜராஜா' புரோமோஷன் விழாவில் கை நடுங்க, வாய் குளறி அவர் பேசியது பல சர்ச்சைகளை உருவாக்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. 

ஆனால், வைரல் காய்ச்சலே காரணம் என்று விஷால் தரப்பினர் விளக்கம் கொடுத்தனர்.

உரிய சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார் என்றும் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில் விழுப்புரத்தில் நடந்த கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஷால், மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அளவுக்கு அதிகமான கூட்டம், சாப்பிடாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றதே மயக்கத்துக்கு காரணம் என்று அவரது முகாமையாளர் ஹரி தெரிவித்தார்.

இந்தநிலையில் தனது உடல்நிலை குறித்து விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், "மது, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. இது என்னை பாதிக்கவும் செய்யாது. நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி'' என்று  கூறியிருக்கிறார்.

இது விஷாலின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X