Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 05 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூரல் நின்னு போச்சு, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய பிரகாஷ்.
இவர் அதிமுகவில் தலைமை கழக நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். இவரது மகன் விஜய் ஹரிஷ் நாங்களும் நல்லவங்க தான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஹரிஷ் வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மாணவியை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டத்திற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் .
மேலும் இதை வீடியோவாக எடுத்துவைத்துக் கொண்டு பலமுறை அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .