2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மாதவனின் பலமுகங்கள்

J.A. George   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் மாதவன், தான் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

சைலன்ஸ் திரைப்படத்துக்கு பிறகு மாதவன் மாறா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் வருகிறார். திலீப் குமார் இயக்கி உள்ளார். 

அத்துடன், விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையாக தயாராகும் ராக்கெட்ரி திரைப்படத்தில் நடித்து இயக்கி வருகிறார். 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தில், மாதவன் புதிய தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கதாநாயகன், வில்லன், மன்னர் என்ற பல தோற்றங்களில் இந்த புகைப்படங்கள் உள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X