2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’மாமனிதனுக்கு பின்னரே சமுத்திரக்கனியுடன் இணைவேன்’

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் சேதுபதி நடிப்பில் ‘மாமனிதன்’ படத்துக்குப் பின்னரே, சமுத்திரக்கனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. மதுரை வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘விரைவில் சகோதரர் சமுத்திரக்கனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது’ என சமுத்திரக்கனியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து  வெளியிட்ட சீனு ராமசாமி, “விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி பிறகே, சமுத்திரக்கனி படத்தை இயக்க உள்ளேன். சமுதாயக் கருத்துகள் நிறைந்த பரபரப்பான படமாக சமுத்திரக்கனி நடிக்கும் படம் இருக்கும். ‘கண்ணே கலைமானே’ வெளியீட்டுக்கு பின்னர் விஜய் சேதிபதி நடிக்கும் ‘மாமனிதன்’ ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X