Freelancer / 2023 மார்ச் 05 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சூர்யாவின் 42 ஆவது திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நடிகை டிஷா பட்டானி, மிருனல் தாகூர் மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோரும் படத்தில் பணியாற்றுகின்றனர்.
இது 2ஆம் சூர்யவர்மன் மன்னனுடைய கதையாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 7ஆம் அறிவு படத்தையடுத்து நீண்ட நாட்களுக்குப் பின் வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்தில் சூர்யா நடிப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
எனினும் படத்தின் இயக்குனர் சிவா என்பது ரசிகர்கள் மத்தியில் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஸ்வாசம், அண்ணாத்தே போன்ற திரைப்படங்களில் அதிகளவான சென்டிமென்ட் காட்சிகளை வைத்து ரசிகர்கள் மத்தியில் இயக்குனர் சிவா விமர்சனத்துக்கு உள்ளானார். சூர்யா 42 இலும் அப்படி எதுவும் செய்து விடுவாரோ என நெட்டிசன்கள் இப்போதே படத்தை கிண்டல் செய்யவும் தொடங்கியுள்ளனர்.
13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago