Freelancer / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் தன்னுடைய மகன்களுக்காக ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தது. தமிழ் திரையுலகினர் மற்றும் அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 18 ஆண்டுகள் விட்டுக்கொடுத்து, அன்பு குறையாத தம்பதியாக இருந்த இவர்கள் தங்களின் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்கிற கருத்தையே நெட்டிசன்கள் முதல் ரசிகர்கள் வரை முன்வைத்து வந்தனர்.

இதை தான் அவர்கள் இருவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் கூறி, இருவருக்கும் இடையே பல முறை சமாதானம் பேசினர். தனுஷ் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்பட்டது. ஒரு நிலையில் இருவருமே பிரியப்போவதாக சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தாலும் தங்களுடைய மகன்கள் மீது போட்டி போட்டு பாசத்தை பொழிந்து வருகிறார்கள்.
குறிப்பாக விவாகரத்துக்கு பின்னர் யாத்ரா, லிங்கா எந்த நேரத்திலும் தனிமையாக இருக்கிறோம் என நினைத்திடாதபடி பார்த்து கொள்கிறார்கள். தனுஷ் தன்னுடைய மகன்களை, அவ்வப்போது ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கே அழைத்து சென்று விடுகிறார். சமீபத்தில் கூட, அமெரிக்காவில் நடந்த கிரே மேன் பிரீமியர் நிகழ்ச்சியில் இரு மகன்களுடன் கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து மகன்கள் இருவரும் சென்னை திரும்பிய கையோடு, தன்னுடைய இரு மகன்களையும் கட்டியணைத்தபடி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படம் வெளியிட்டு இவர்கள் தான் தன்னுடைய உலகம் என்பது போல் தெரிவித்திருந்தார்.

இவர்களின் இந்த சந்திப்புக்கு காரணம் தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தான். அவர் தன்னுடைய பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்றுள்ளார். அதை காண தான் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மேட்சிங் - மேட்சிங் உடையில் சென்றுள்ளனர். இவர்களுடன் இந்த புகைப்படத்தில் விஜய் ஜேசுதாஸின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026