Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 16 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், இருவரும் மீண்டும் திரையில் ஜோடியாக வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'யே மாய சேசாவே' என்ற காதல் கிளாசிக் படம் ஜூலை 18 அன்று மறுவெளியீடு செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
நாக சைதன்யாவும் சமந்தா ரூத் பிரபுவும் இணைந்து நடித்த இந்தப் படம், தமிழில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையும், கார்த்திக்-ஜெஸ்ஸி கதாபாத்திரங்களின் காதலும் ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்த மறுவெளியீட்டு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாக சைதன்யாவும் சமந்தாவும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
4K தொழில்நுட்பத்தில் படம் மறுவெளியீடு செய்யப்படுவதால், இருவரும் விளம்பரங்களில் இணைவார்களா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 'யே மாய சேசாவே' படப்பிடிப்பின்போதுதான் நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலிக்கத் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago