J.A. George / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றார்.
இந்தக் குழந்தைகளை கவனிப்பதற்காக கடந்த சில மாதங்களாக அவர் எந்தப் புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ’ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா தற்போது புதிய இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் எனவும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் இது என்றும் கூறப்படுகிறது.
அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் ’தனி ஒருவன் 2’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு உருவாக இருப்பதாகவும் இதில் நடிப்பதற்காகவும் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகிறது.
ஏற்கெனவே ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த ’இறைவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் அது ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .