2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மீண்டும் பழைய “ஜோடி”

J.A. George   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிந்தியில் வெளியாகி வெற்றிப்பெற்ற, அந்தாதுான் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில், தபு நடித்த பாத்திரத்தில், சிம்ரன் நடிப்பது உறுதியாகியுள்ளது.  ரீமேக் உரிமத்தை தியாகராஜன் வாங்கியுள்ளார். இதில், நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். 

ஜே.ஜே.பிரட்ரிக் திரைப்படத்தை இயக்க உள்ளார். தபு பாத்திரத்தில் சிம்ரன் நடிப்பது மட்டுமின்றி, பிரசாந்த் - சிம்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இணைந்து நடிப்பது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, சிம்ரன் கூறுகையில், “இந்திய சினிமாவில், அந்தாதுான் ஒரு மைல்கல் திரைப்படம். தபு பாத்திரத்தில் நான் நடிப்பது, பெரிய பொறுப்பு. சவாலான அப்பாத்திரத்தில் மட்டுமின்றி, மீண்டும் பிரசாந்த் உடன் நடிப்பது மகிழ்ச்சி” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X