2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மீண்டும் வித்தியாசம்

J.A. George   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வித்தியாசமாக திரைப்படம் எடுப்பது தற்போது அதிகமாகி இருக்கிறது. இயக்குநர் பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தை அவர் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கினார். இது பல விருதுகளை வென்றது. 

அடுத்து அவர் ஒரே ஷொட்டில் ஒரு திரைப்படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஒரு ஷொட்டில் படம் எடுப்பது புதிதல்ல. அகடம் என்றத் திரைப்படம் தான் முதன் முதலாக ஒரே ஷொட்டில் எடுக்கப்பட்டது. அதன்பிறகு பல திரைப்படங்கள் வெளிவந்தன.

இப்போது விமல் நடிக்கும் திரைப்படம் ஒன்றை ஒரே ஷொட்டில் எடுக்கிறார்கள். கழுகு 2 திரைப்படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கிறார். நடிகர் நடிகைகள் தெரிவு நடைபெற்று வருகிறது. 

1 பந்து 4 ரன் 1 விக்கெட் திரைப்பட இயக்குனர் வீரா இந்த திரைப்படத்தை இயக்குகிறார். நேற்று முன்தினம் இதன் பூஜை நடந்தது. வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X