2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முதலிடத்தில் கீர்த்தி

J.A. George   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டில் டுவிட்டர் தளத்தில் தென்னிந்திய அளவில் முதல் பத்து இடங்களில் எந்த நடிகரைப் பற்றி, எந்த நடிகையரைப் பற்றி அதிகமான டுவீட்டுகள் பதிவாகி உள்ளன என்பது பற்றிய பட்டியலை டுவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் டொப் நடிகர்கள் பட்டியலில் விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய மூன்று நடிகர்கள் மட்டுமே இடம் பெற்றனர். டொப் 10 நடிகைகள் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

2ஆவது இடத்தில் காஜல் அகர்வால், மூன்றாவதாக சமந்தா, நான்காவதாக ராஷ்மிகா, ஐந்தாவது இடத்தில் பூஜா ஹெக்டே, ஆறாவது, ஏழாவது இடங்களில் டாப்சி, தமன்னா, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது இடங்களில் முறையே ரகுல் ப்ரீத், ஸ்ருதிஹாசன், த்ரிஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் நடித்து இந்த ஆண்டில் தமிழ் திரைப்படமான பெண்குயின், தெலுங்கு திரைப்படமான மிஸ் இந்தியா ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஓடிடி தளத்தில்தான் வெளியாகின.  எனினும் இரண்டுமே வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X