Freelancer / 2022 செப்டெம்பர் 24 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழில் தயாராகும் படங்களை தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று 'பான் இந்தியா' படங்களாக வெளியாகி வருகின்றன. இதேபோல் ஹிந்தி, தெலுங்கில் தயாராகும் படங்களும் அனைத்து மொழிகளிலும் வெளியாகின்றன.
பான் இந்தியா படங்களால் நடிகர், நடிகைகள் மொழி எல்லைகளை தாண்டி செல்வாக்கு பெற்று வருவதுடன், அனைத்து மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வருகின்றன. இதன் மூலம் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபலமாக உள்ள பான் இந்தியா நடிகைகள் குறித்து கருத்து கணிப்பில் பிரபலமான 10 நடிகைகள் பட்டியலில் சமந்தா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
சமந்தாவுக்கு அடுத்த இடங்களில் முறையே அலியாபட், நயன்தாரா, காஜல் அகர்வால், தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், கத்ரினா கைப், பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் உள்ளனர்.
இந்த சாதனையை சமந்தா ரசிகர்கள் வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தாவுக்கு 'பேமிலிமேன் 2' வெப் தொடரில் நடித்த பின்னர் ஹிந்தி பட வாய்ப்புகளும் வந்தது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026