2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

முதல் நாளே இணையத்தில் லீக்கானது தக் லைஃப்

Freelancer   / 2025 ஜூன் 06 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதுவே இந்த படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் அதற்கு மேல் பெரிய இடியாக வந்திருக்கிறது மற்றொரு சம்பவம். அதாவது படம் வெளியான முதல் நாளே சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் படத்தின் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்.

இப்படி எதுவும் தக் லைஃப் படத்திற்கு வரக்கூடாது என்பதற்காக சட்ட விரோதமான இணையதளங்களில் படங்களை வெளியிடக்கூடாது என ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. நீதிபதியும் இந்த இணையதளங்களில் படங்களை வெளியிடக்கூடாது என தடை செய்தது.

ஆனால் தடையை மீறியும் இன்று தக் லைஃப் படம் இணையத்தில் வெளியாகி பேர அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒருபுறம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இணையத்தில் வெளியாகி உள்ளதால் வசூல் இன்னும் அடி வாங்க வாய்ப்பு இருக்கிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X