2025 மே 05, திங்கட்கிழமை

மேடையில் விசிலடித்த நடிகை

J.A. George   / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” திரைப்படத்தில் சிலம்பரசன், ஹரிபிரியா பாடிய “புல்லட்” என்ற முதல் பாடலை சென்னையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் நடிகையான கீர்த்தி ஷெட்டியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இயக்குநர் லிங்குசாமிக்கும், திரைப்படத்தை சேர்ந்தவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தமிழ் ரசிகர்கள் தனக்கு மிகுந்த ஆதரவினை அளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார். அப்போது திரைப்படத்தில் நடிகை விசில் அடிக்கும் காட்சிகள் இருப்பதை அறிந்த தொகுப்பாளர், ரசிகர்களுக்காக விசிலடிக்குமாறு கோரினார்.

இதையடுத்து இயக்குநரின் அனுமதியை பெற்ற கீர்த்தி ஷெட்டி, மேடையிலேயே விசிலடித்து அசத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X