Editorial / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். அதன்பின்னர் நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் தற்போது மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தீ இவன்" படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது,
இந்த படத்தில் இடம் பெறவுள்ள "மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்" என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம்,
அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது.
மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன் கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக்கொண்டார். அதோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15-ஆம் திகதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago