2025 மே 05, திங்கட்கிழமை

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோ சூட்

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல மாடலான யாஷிகா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் பல படங்களில் சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து கிளாமர் ரோல்களிலேயே நடித்து வந்த யாஷிகா,  தற்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

கார் விபத்தில் சிக்கி,  படுத்த படுக்கையான யாஷிகா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து  மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். கார் விபத்தில் தனது நெருங்கிய தோழியை இழந்த யாஷிகா,  குற்ற உணர்ச்சியில் பல நாட்களாக தவித்து வந்தார்.

தோழியை பிரிந்த சோகத்தையும் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மோசமாக கமெண்ட் செய்தவர்களுக்கும் உருக்கமாக பதிலளித்த யாஷிகாவிற்கு பலர் ஆதரவு அளித்தனர்.
விபத்து காரணம் யாஷிகா மீது வழக்கு தொடர்ந்து,  அவரது டிரைவிங் லைசென்சையும் போலீசார் ரத்து செய்தனர். 

விபத்திற்கு முன்பு நடத்தியதை விட படு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியா ரசிகர்களை திணறடித்து வருகிறார் யாஷிகா.

இந்த ஆண்டில் மட்டும் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், பகீரா, சிறுத்தை சிவா, தி லெஜண்ட் உள்ளிட்ட அரை டஜன் படங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X