2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் சிங்கப்பூர் சலூன்

Mithuna   / 2024 ஜனவரி 29 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் 25-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தை ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். வெளியான இரண்டு நாட்களில் படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X