Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 16 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இயக்குநர் ராம்கோபால்வர்மா.
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன், அதன்பிறகு ரஜினிகாந்தையும் கடத்த திட்டமிட்டிருந்ததாக ஒரு பரபரப்பு செய்தியை முன்னர் டுவிட் செய்திருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், தற்போது மீண்டும் அவர் ரஜினியைப்பற்றிய ஒரு கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
அதாவது, 'ரஜினி நடித்த எந்திரன் திரைப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்தால் திரைப்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் அமிதாப் நடித்த te3n திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்தால் ரொம்ப சுமாராக இருந்திருக்கும்'என்றொரு கருத்தினை டுவிட் செய்திருக்கிறார்.
இந்த கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தில் பெரிய கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் ராம்கோபால் வர்மாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு விடுத்துள்ள செய்தியில், 'உங்களைப்போன்ற இயக்குநர்களால் மட்டுமே ஷோலே போன்ற திரைப்படங்களை ப்ளாப் ஆக்க முடியும். ஆனால் எங்கள் ரஜினி te3n திரைப்டத்தில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கும்' என்று ராம்கோபால்வர்மாவுக்கு எதிராக டுவிட் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago