2025 மே 21, புதன்கிழமை

ரஜினி-ரஞ்சித் சந்திப்பு?

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கபாலி” திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூலை தந்த படமாக இருந்து வரும் நிலையில்,  தற்போது அவர் அடுத்த திரைப்படமான “2.0” டப்பிங் பணியில் உள்ளார்.
 
மேலும், ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை “கபாலி“ இயக்குநர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் வெளியான செய்தியை ஏற்கெனவே பார்த்தோம்.

 இந்நிலையில், ரஜினி-ரஞ்சித் இணையும் புதிய திரைப்படம் குறித்து ஆலோசனை செய்ய, இன்று ரஜினியை ரஞ்சித் சந்திக்க உள்ளதாகவும், ரஞ்சித் உடன் ஆடை வடிவமைப்பாளர் குழுவும் செல்லவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
“2.0” திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதால் விரைவில் அவர் ரஞ்சித் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தின் திரைப்படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X