2025 மே 09, வெள்ளிக்கிழமை

ரஜினி வழியில் சிவகார்த்திகேயன்

Subashini   / 2018 மே 06 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்கு வந்து, முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறிவிட்ட சிவகார்த்திகேயனின், புதிய திரைப்படமான சீமராஜா, விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர், ராஜேஷ் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்னும் பெயரிடப்படாத அத்திரைப்படங்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் ​வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இயக்குனர் ராஜேஷின் திரைப்படம் என்றால் காதல், நகைச்சுவை அதிகமாகவே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்நிலையில் இந்தத் திரைப்படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மன்னன் படத்தைத் தழுவி தான், இத்திரைப்படம் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவகார்த்திகேயன் நடிகர் விஜய்யின் ஸ்டைலில் நகைச்சுவை செய்கிறார், சிறுவர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்க்கிறார் என்ற பேச்சு உண்டு. ஆனால் விஜய்யோ, ரஜினியை பின்பற்றி நகைச்சுவை செய்து, சிறுவர்களின் விருப்ப நாயகனாக மாறியதாகவும் கூறுவார்கள்.

இதனால், விஜய்யை போல நடிப்பதற்கு பதிலாக, நேராக ரஜினி ஸ்டைலிலேயே நடிக்க முடிவு செய்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். அதன் முதல்படியாகத் தான் இந்த திரைப்படத்தை தேர்வு செய்துள்ளார் என​ தமி​ழ் திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும், இந்த திரைப்படத்தில் விஜயசாந்தி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படும் அதேநேரம், குஷ்பு கதாபாத்திரத்திற்கான தேர்வு நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, 50 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X