2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ரம்யா பாண்டியனின் வித்யாசம்

J.A. George   / 2023 ஜனவரி 31 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார்.

பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெரிதானது.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அவ்வப்போது ரம்யா பாண்டியன் தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ரம்யா பாண்டியன், தற்போது வெளியிட்டிருக்கும் வித்யாசமான உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பலரையும் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X