Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராணா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்துக்கு, ‘நான் ஆணையிட்டால்’ என பெயரிட்டுள்ளார்கள்.
தேஜா இயக்கத்தில், தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம், ‘நேனே ராஜூ நேனே மந்திரி’. ராணா, காஜல் அகர்வால், கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில், இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதற்கு, தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளத்தில், ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ‘பாகுபலி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ராணா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் என்பதால், இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது தமிழிலும் இத்திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு ‘நான் ஆணையிட்டால்’ என பெயரிட்டுள்ளார்கள். அதன் ட்ரெய்லரையும் வெளியிட்டுள்ளார்கள். விரைவில் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago