2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ராஷ்மிகாவுக்கு மகுடம் வழங்கிய கூகுள்

Editorial   / 2020 நவம்பர் 22 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னட படமான 'கிரிக்பார்ட்டி' மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமான கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், 2020ஆம் ஆண்டு தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேடவைத்தவர் என்கிற மகுடத்தை ராஷ்மிகாவுக்கு கூகுள் வழங்கியுள்ளது.

கூகுள் தேடுபொறியில் ‘National Crush of India 2020’ என தேடினால், ராஷ்மிகாவின் பெயரும் அவர் குறித்த விபரங்களையும் காட்டுகிறது கூகுள். இந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட பாலிவுட் நடிகைகளைக் கூட, கூகுள் தேடலில் பின்னுக்குத்தள்ளி ராஷ்மிகா இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X