Freelancer / 2022 பெப்ரவரி 04 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாவில் சில பிரமாண்ட காட்சிகள் பார்ப்பவர்களுக்கு அவை செட் என்றே தெரியாத அளவிற்குத் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல் சில தமிழ் சினிமா படங்களில் பேசப்பட்ட காட்சிகள் நம்பமுடியாத அளவிற்கு செயற்கையாக உருவாக்கப்பட்டவை.
உதாரணமாக பெரிய பெரிய அரண்மனைகள் மற்றும் வீடுகள் போன்றவை படத்திற்காக செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும்.

அதில் முதலில் 2005ஆம் ஆண்டு இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் அரண்மனையைக் குறிப்பிட முடியும்.
இதில் இடம்பெற்ற அந்த பிரம்மாண்ட அரண்மனை உண்மையான அரண்மனை கிடையாதாம்.இது செயற்கையாகப் படத்துக்காக அமைக்கப்பட்டதாம்.
அதேபோல் 1996ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் பல மிரள வைக்கும் காட்சிகளைக் கொண்டிருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற இந்தியன் தாத்தா வீடும் செட்டப் தானாம்.
அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் இடம்பெற்ற லைட் ஹவுஸ் மற்றும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற மெட்ரோ ரயில் சண்டைக் காட்சி, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம்பெற்ற வீடு எல்லாம் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதானாம்.

இதுதவிர தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் இடம்பெற்ற சிறை படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டப் தான்.
பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களில் சில காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகின்றன, அவ்வாரான காட்சிகள் ரியல் இல்லை செட்டப் என்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025