2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

J.A. George   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் நடிப்பில் கடந்த பெப்ரவரி மாதம் வெளிவந்த மலையாளத் திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தத் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது.

அய்யப்பனும் கோசியும் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கிறார். அவருடன் ராணா டகுபதி நடிக்க உள்ளார். சாகர் கே சந்துரு இயக்க உள்ளார். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பவன் கல்யாண் ஜோடியாக சாய் பல்லவியும், ராணா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X